search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரங்கள் வெட்டி கடத்தல்
    X

    மரங்களை வெட்டி லாரியில் ஏற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    மரங்கள் வெட்டி கடத்தல்

    • இப்பகுதியில் உள்ள நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி செங்கல் சூளைக்காக லாரிகளில் சில மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.
    • அரசு அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தும் அதிகாரிகள் வெள்ளக்கரடு பகுதிக்கு ஆய்வுக்கு வராமலேயே பட்டா நிலத்தில் தான் மரங்கள் வெட்டப்படுகிறது என்று கூறுகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா மாங்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மஞ்சநாயக்கனஅள்ளி கிராமம், வெள்ளக்கரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

    இந்த புறம்போக்கு நிலத்தில் வேம்பு, துருஞ்சி, பாலை வகையைச் சேர்ந்த மரங்கள் வளர்ந்து வனப்பகுதி போல் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் உள்ள நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி செங்கல் சூளைக்காக லாரிகளில் சில மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.

    இதேபோல் நேற்று வெள்ளக்கரடு பகுதியில் உள்ள துருஞ்சி, வேம்பு, பாலை உள்ளிட்ட மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் வெள்ளக்கரடு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் மர்ம நபர்கள் சிலர் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி லாரிகளில் கடத்தி வருகின்றனர்.

    இதே போல் நேற்றும் வெள்ளக்கரடு பகுதியில் 5 லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி லாரியில் ஏற்றும் போது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தும் அதிகாரிகள் வெள்ளக்கரடு பகுதிக்கு ஆய்வுக்கு வராமலேயே பட்டா நிலத்தில் தான் மரங்கள் வெட்டப்படுகிறது என்று கூறுகின்றனர்.

    எனவே மரங்களை வெட்டி கடத்தி வரும் மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×