என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை
- ஆன்லைன் ரம்மியில் சக்திவேல் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்துள்ளார்.
- கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சக்திவேல் (வயது 31). டிப்ளமோ பட்டதாரி.
இவருக்கு அருணா என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சக்திவேல் கடையத்தில் வாகனங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 21-ந் தேதி சக்திவேல் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீப காலமாக ஆன்லைன் ரம்மியில் சக்திவேல் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவர் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி ரூ. 6 லட்சம் வரை பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.