search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நீலகிரி மாவட்டத்தில் கொடி நாள் நிதி வசூல் ரூ.91.26 லட்சம் நிர்ணயம்-கலெக்டர் அம்ரித் தகவல்
    X

    நீலகிரி மாவட்டத்தில் கொடி நாள் நிதி வசூல் ரூ.91.26 லட்சம் நிர்ணயம்-கலெக்டர் அம்ரித் தகவல்

    • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.
    • கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்களின் நலத்துறை சார்பில், கொடி நாள் தினத்தை முன்னிட்டு, கொடி நாள் நிதி வழங்கி, கொடி நாள் வசூலினை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    இந்திய நாட்டின் முப்படைகளில் பணியாற்றி, பாதுகாப்புப் படைவீரர்கள் தங்களது இளமை காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு கடினமான பணிகளை நமது தேசத்திற்காக தன்னலம் கருதாது தங்களது உயிர் மற்றும் உடல் உறுப்புகளை இழந்தும் நமது நாட்டிற்காக பணியாற்றி வருகின்றனர். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.

    நமது நாட்டில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய மாநில அரசு மூலமாக வாழ்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவர்களில் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றி உயிரிழந்தோர்களின் வாரிசுதாரர்களுக்கு உதவித்தொகை. குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் சிறார்கள் உயர்கல்விகளில் பயில்வதை ஊக்குவித்தும், படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு கண்கண்ணாடிகள் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதனைதொடர்ந்து, போரில் பணியின் போது உயிரிழந்தோரின் வாரிசுகள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் குருப்-சி மற்றும் டி பதவிகளில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு முன்னுரிமை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் படைவீரர்களுக்கென குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்திட கொடிநாள் நிதி வசூல் தொகை பொது மக்களிடமிருந்து பல்வேறு துறை அதிகாரிகளால் திரட்டப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு கொடி நாளுக்காக ரூ.86.39 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவில் ரூ.1. 39- கோடி (161 சதவீதம்) நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டிற்கு ரூ.91.26 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடிநாள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடமும் படைவீரர் கொடிநாள் நிதிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட கூடுதலாக கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×