என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கம்பத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை தரமற்ற பொருட்கள் அழிப்பு
- கம்பத்தில் சாலையோர பானிபூரி மற்றும் சிக்கன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்த பட்டது.
- கெட்டுப்போன மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட இறைச்சி மற்றும் காளான், காளிபிளவர் உள்ளிட்டவைகள் சுமார் 20 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
கம்பம்:
தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உத்தரவின்படி கம்பத்தில் வ.உ.சி திடல்,மெயின்ரோடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு,பார்க்ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலையோர பானிபூரி மற்றும் சிக்கன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்த பட்டது.
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணிமாறன், மதன்குமார், சரண்யா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் கெட்டுப்போன மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட இறைச்சி மற்றும் காளான், காளிபிளவர் உள்ளிட்டவைகள் சுமார் 20 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
இதேபோல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட பழைய எண்ணெய் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது குறித்து கம்பம் உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் கூறுகையில், கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல் உரிமையாளர்கள், சாலையோர உணவு கடை விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
உணவில் கலப்படம், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் உணவு பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனதெரிவித்தார்.