search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    மயிலாடுதுறையில் பேரணி நடத்திய சத்துணவு ஊழியர்கள்.

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் கேட்டு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி வாயிற் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
    • குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட வேண்டும்,

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு பேரணி மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன முழக்க வாயிற்கூட்டம் நடத்தினர்.

    வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் கேட்டு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட தலைநகரங்களில் பேரணி வாயிற் கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன வாயிற் கூட்டம் நடத்தினர்.

    மாவட்டத் தலைவர் சிவபழனி பேரணியை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கிய பேரணியானது நகரின் முக்கிய விதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கண்டன வாயிற் கூட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

    Next Story
    ×