search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி பெண்களிடம் பணம் ரூ.6 லட்சம் மோசடி
    X

    தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்களை படத்தில் காணலாம்.

    தருமபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி பெண்களிடம் பணம் ரூ.6 லட்சம் மோசடி

    • 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை தருவதாக கூறி விளம்பரம் கொடுத்துள்ளனர்.
    • 45 க்கும் மேற்பட்ட பெண்கள் கால் கொலுசு, காதணிகளை அடமானம் வைத்தும், ரூ.6 லட்சம் வரை பணத்தைக் கட்டி சேர்ந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி அருகே உள்ள அமுதம் காலனி பகுதியில் ட்ரான்ஸ் இந்தியா என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் படித்த குடும்ப பெண்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை தருவதாக கூறி சமூக வலைதளம் மற்றும் உள்ளுர் சேனல்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர். விளம்பரத்தை பார்த்த பெண்கள் அந்த நிறுவனத்தை அனுகியுள்ளனர்.

    நிறுவனத்தில் வேலை கேட்டு வந்த பெண்களிடத்தில் நுழைவு கட்டணம் 100 ரூபாய் என்றும், நேர்முகத் தேர்வு எழுத ஆயிரம் ரூபாயும், நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு 10 ஆயிரத்து 500 ரூபாய் கட்டினால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் எனக் கூறினர்.

    இதனை நம்பி சுமார் 45 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுடைய கால் கொலுசு, காதணிகள் உள்ளிட்டவைகளை அடமானம் வைத்தும், விற்றும் ரூ.6 லட்சம் வரை பணத்தைக் கட்டி பணியில் சேர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் பணியில் சேர்ந்த போது அவர்களுக்கு சில அழகு சாதன பொருட்கள், சத்துமாவு உள்ளிட்ட கிஃப்ட் பாக்ஸை கொடுத்து இது உங்களுக்கு இலவசம் என்று கொடுத்துள்ளனர். பின்னர் மூன்று மாத காலம் முடிந்த பின்னும் வேலை இன்றியும் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவது தெரிந்த பெண்கள் நிறுவனத்திற்கு சென்று விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது நிறுவன உரிமையாளர் மற்றும் நிறுவனத்தில் பணிபுரிபவர் ஆகியோர் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி நீங்கள் கட்டிய பணத்திற்கு அழகு சாதன பொருட்கள் கொடுக்கப்பட்டது எனக் கூறி பெண்களை தாக்கியதாகவும், மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள் ஒன்று திரண்டு தனியார் நிறுவனத்தை இழுத்து பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று தங்களுடைய பணத்தை மீண்டும் பெற்றுதர வேண்டும், ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×