search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3300 பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை
    X

    3300 பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை

    • சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் உள்ள பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் 2 நாட்கள் நடந்தது.
    • இலவச மருத்துவ முகாமில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 3300 கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

    ராசிபுரம்:

    சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் உள்ள பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் 2 நாட்கள் நடந்தது. முகாமை எம்.பி. சின்ராஜ் தொழிலதிபர் ராமசாமி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தனர்.

    தி.மு.க. அயலக அணி மாநில துணைச் செயலாளர் முத்துவேல் ராமசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முகாமை ராமச்சந்திரா கல்வி நிறுவன இணை வேந்தர் செங்குட்டுவன் பார்வையிட்டார்.

    முகாமில் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் பொது மருத்துவம், நுரையீரல், குழந்தைகள் மருத்துவம், இருதய பரிசோதனை, நரம்பியல், சிறுநீரகம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண், பல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. பெண்க ளுக்கான மார்பக புற்று நோய் கண்டறியும் நவீன பரிசோதனைகளும் இலவச மாக மேற்கொள்ளப்பட்டன.

    இசிசி, ரத்த பரிசோதனை, எக்கோ பரிசோதனை செய்யப்பட்டது.காது கேளா தோர் கருவி வழங்கப்பட்டது. மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. 2 நாட்கள் நடந்த இலவச மருத்துவ முகாமில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 3300 கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×