என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- ஜிகே வாசன்
- தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் அதிக சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.
- மதுரை மாநகர மக்கள் மழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு மதுரையில் பெய்திருக்கும் கனமழையால் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடி பணிகளை, அவசியப் பணிகளை மேற்கொண்டு மதுரை மக்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும் தொடர் மழையின் தாக்கத்தில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை தேவை. தமிழக அரசு மதுரை உள்ளிட்ட மற்றப் பகுதிகளில் மழை பெய்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் அதிக சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக மதுரை மாநகர மக்கள் மழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுரை மாநகர மக்களுக்கு மாநகராட்சி பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணம் கொடுத்து அவர்களுக்கு உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.