search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்னும் 3 ஆண்டுகளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1 லட்சத்தை தொடுமாம்...
    X

    இன்னும் 3 ஆண்டுகளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1 லட்சத்தை தொடுமாம்...

    • செப்டம்பர் 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ. 53 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது.
    • இன்று 59 ஆயிரத்து 520-க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ. 53 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. அதே மாதம் 24-ந்தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது.

    தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. நேற்று முதன்முறையாக 59 ஆயிரத்தை தொட்டது.

    செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து சரியாக இரண்டு மாதங்களில் (60 நாட்களில்) தங்கம் விலை பவுனுக்கு 5,960 ரூபாய் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் உயர்ந்த தங்கம் விலை மீண்டும் குறைய வாய்ப்பில்லை. உயர்ந்த இடத்தில் மீண்டும் உயர்ந்து கொண்டே இருக்கும் என தங்கம், வைர நக வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெயந்திலால் சலானி கூறுகையில் "தங்கம் விலை இனிமேல் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. எப்போதெல்லாம் உயர்கிறதோ, இந்த இடத்தில் இருந்து பயணிக்கும் நிலைதான் இருக்கிறது. நேற்று ஒரு பவுன் 59 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இன்று 59 ஆயிரத்து 520 ரூபாயாக உயர்ந்துள்ளது. மிகவிரைவில் 60 ஆயிரத்தை கடந்த புதிய உச்சத்தை நோக்கிய பயணிக்கும் என சொல்லலாம். இன்னும் 3 ஆண்டுகளில் தங்கம் விலை 1 லட்சம் ரூபாய் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும்.

    இவ்வாறு ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×