search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நாககாமாட்சியம்மன் கோவிலில் கோமாதா பூஜை
    X

    உடுமலை நாககாமாட்சியம்மன் கோவிலில் கோமாதா பூஜை

    • பொதுமக்கள் ஒன்று கூடி தலைவாசல் அமைக்கும் பணியை தொடங் கினார்கள்.
    • விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னவாளவாடி கிராமத்தில் நாககாமாட்சியம்மன் கோவில் உள்ளது.கோவில் வளாகத்தில் விநாயகர், கன்னிமார்கள், பதினெட்டாம்படி கருப்பராயன் ஆகிய கடவுள்கள் என தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தலைவாசல் அமைக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் பொதுமக்கள் ஒன்று கூடி தலைவாசல் அமைக்கும் பணியை தொடங்கினார்கள். பணி நிறைவடைந்த நிலையில் தலைவாசல் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து சின்ன வாளவாடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உலக நலன் வேண்டியும், விவசாயம் செழித்திடவும், உலக மக்கள் நோய் நொடி இன்றி வாழ்ந்திடவும் 108 கோமாதா பூஜையும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மாடுகளை கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டனர். அக்னி குண்டத்தின் முன்பாக கூடியிருந்த மாடுகளுக்கு தனித்தனியாக மந்திரங்கள் ஓதி பூஜை நடத்தப்பட்டது. இந்த விழாவில் சின்னவாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×