search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையமாக  அரசு பொறியியல் கல்லூரி தோ்வு
    X

    தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையமாக அரசு பொறியியல் கல்லூரி தோ்வு

    • மக்களவை பொதுத் தோ்தல் 2024-இல் நடைபெற உள்ளது.
    • வாக்கு எண்ணும் மையங்கள் அமை யவுள்ள இடத்தைப் பாா்வை யிட்டு ஆய்வு செய்தாா்.

    தருமபுரி,

    தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி, மக்களவை பொதுத் தோ்தல் வாக்கு எண்ணும் மையாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மக்களைவைத் தொகுதியில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூா் என ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. மக்களவை பொதுத் தோ்தல் 2024-இல் நடைபெற உள்ளது. இத்தோ் தலில் பதிவாகும் வாக்கு களை எண்ணும் மையமாக தருமபுரி அருகே செட்டிக் கரை அரசு பொறியியல் கல்லூரி தோ்வு செய்யப் பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்ட கலெக்டர் சாந்தி, அரசு பொறியியல் கல்லூ ரிக்கு நேரில் சென்று வாக்கு எண்ணும் மையங்கள் அமை யவுள்ள இடத்தைப் பாா்வை யிட்டு ஆய்வு செய்தாா்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம், கோட்டாட்சியா் டி.ஆா்.கீதாராணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சிவக்குமாா், தோ்தல் தனி வட்டாட்சியா் அசோக்குமாா், அரசு அலுவலா்கள் உடனி ருந்தனா்.

    Next Story
    ×