search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமசபை கூட்டம் ரத்து:  கிராம சேவை மைய கட்டிடத்திற்கு   பூட்டு போட்டு பொதுமக்கள் தர்ணா
    X

    பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    கிராமசபை கூட்டம் ரத்து: கிராம சேவை மைய கட்டிடத்திற்கு பூட்டு போட்டு பொதுமக்கள் தர்ணா

    • தலைவர் சாந்தி, பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை.
    • கிராம சபை கூட்டம் நடந்தால் மூன்று வருடத்திற்கான கணக்குகள் காட்ட வேண்டும் என்ற பயத்தில் கிராம சபை கூட்டத்தை நிராகரித்துள்ளதாக கிராம மக்கள் குற்றசாட்டை முன்வைத்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள எம்.வெளாம்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் குறித்து பஞ்சாயத்து தலைவர் சாந்தி, பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. நேற்று காலை கிராம சேவை மைய கட்டிடம் முன்பு தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்பு கிராம சபை கூட்டத்தில் குறைவான நபர்கள் மட்டுமே இருந்ததால் கூட்டத்தை புறக்கணித்து சென்றுள்ளார்.

    இது குறித்து தகவலறிந்த இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில் பஞ்சாயத்து தலைவர் சாந்தி பெயரில் அவருடைய கணவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது குறித்து ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்றதாகவும் கூறினர்.

    கிராம சபை கூட்டத்தில் முறையான கணக்குகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதாகவும், கிராம சபை கூட்டம் நடந்தால் மூன்று வருடத்திற்கான கணக்குகள் காட்ட வேண்டும் என்ற பயத்தில் கிராம சபை கூட்டத்தை பஞ்சாயத்து தலைவர் சாந்தி நிராகரித்துள்ளதாக கிராம மக்கள் குற்றசாட்டை முன்வைத்தனர்.

    பஞ்சாயத்து தலைவர் இல்லாத கட்டிடம் எதற்கு திறந்திருக்க வேண்டும் என்று கட்டிடத்திற்கு பூட்டு போட்டு, தலைவரை கண்டித்து துணை தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×