search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் டெங்கு பரவும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
    X

    டெங்கு பரவும் பகுதிகளில் நலவழித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    காரைக்காலில் டெங்கு பரவும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

    • காரைக்காலில் டெங்கு பரவும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில், டெங்கு நோய் பரவும் பகுதிகளில், மாவட்ட நலவழித்துறை அதிகாரிகள் ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியதிலிருந்து, ஒரு சில நகர் பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காரைக்கால் ராம்நகர், நேரு நகர் விரிவாக்கத்தில் இருவருக்கு நேற்று டெங்கு நோய் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமையில், நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதர ஆய்வாளர் சிவவடிவேல், சுகாதார உதவியாளர் மரிய ஜோசப் மற்றும் கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, டெங்கு சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    மேலும், அப்பகுதி மக்களுக்கு, கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து, அதனை தடுக்கும் முறைகள், சிகிச்சை முறை, டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக, அப்பகுதி முழுவதும், கொசுக்களை அழிக்கும் புகை மருந்து அடிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் பொதுமக்களிடம் பேசியதாவது:-மழை காலங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்க கூடும். அவற்றில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் முட்டையிட்டு கொசு உற்பத்தியை பெருக்கும். இதனால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் இந்த மழைக்கால, பேரிடர் காலங்களில் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருந்தால், மருந்துகளை உட்கொள்ளா மல், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். என்றார்.

    Next Story
    ×