search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்பனை- இல்லத்தரசிகள் அதிர்ச்சி
    X

    ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்பனை- இல்லத்தரசிகள் அதிர்ச்சி

    • சமையலில் முக்கிய பொருளாக தக்காளி உள்ளதால் அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
    • தக்காளி செடிகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி மற்றும் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், ஓசூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனை சேலம் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். சமையலில் முக்கிய பொருளாக தக்காளி உள்ளதால் அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து தற்போது ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் தேவையை விட குறைந்த அளவே பொது மக்கள் தக்காளியை வாங்கி செல்கிறார்கள். மேலும் இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    விலை உயர்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூரு சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தக்காளி செடிகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடையும் என்பதால் விலை குறைய வாய்ப்பில்லை என்றனர். தற்போது 20 கிலோ எடை கொண்ட ஒரு கிரேட் தக்காளி ரூ.2ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இதை வியாபாரிகள் வாங்கி தரம் வாரியாக பிரித்து ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    சேலம் மார்க்கெட்களில மற்ற காய்கறிகளின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு-

    உருளை கிழங்கு ஒரு கிலோ 55, சின்ன வெங்காயம் 50, பெரிய வெங்காயம் 50, பச்சை மிளகாய் 65, கத்திரி 80, வெண்டைக்காய் 35, முருங்கைக்காய் 110, பீர்க்கங்காய் 45, சுரக்காய் 30, புடலங்காய் 40, பாகற்காய் 75, தேங்காய் 35, முள்ளங்கி 35, பீன்ஸ் 80, அவரை 90, கேரட் 100, மாங்காய் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    Next Story
    ×