என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விடுமுறை எதிரொலி: குற்றாலம் அருவிகளில் குளிக்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
- தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
- குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
கேரளாவில் மழை தீவிரம் எடுத்துள்ள நிலையில் தென்காசியிலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது.
சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் குளுமையான காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது.
இதனால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளது. இதனால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக கார்களிலும், வேன்களிலும் வந்தனர்.
இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.