search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலை மீது வழக்கு தொடருவேன்- எம்.பி. பேச்சு
    X

    கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி பேசினார்.

    அண்ணாமலை மீது வழக்கு தொடருவேன்- எம்.பி. பேச்சு

    • நான் 10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக அண்ணாமலை பேசியுள்ளார்.
    • தி.மு.க.வை அசைத்து பார்க்க யாராலும் முடியாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மத்திய மாவட்ட, மாநகர திமுக சார்பில், காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி, விவசாயிகளை காப்பாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்று தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு வந்தவ ர்களை மாநகர செயலாளர் சண்.ராமநாதன் வரவேற்றார். மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், டிகேஜி.நீலமேகம் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திமுக பொருளாளரும், பாராளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பேசியதாவது:-

    பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஏலம் அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக தமிழக முதல்வர் டெல்லியில் உள்ள என்னை தொடர்பு கொண்டு விவரத்தை எடுத்துக்கூறி, துறை அமைச்சரிடம் பேசி, கடிதம் அனுப்பி அந்த ஏலத்தை நிறுத்த வைத்தோம். நான் 10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக அண்ணாமலை பேசியுள்ளார்.

    என் மீது கிரிமினல் வழக்கு தொடராத காரணத்தால் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என முடிவு செய்துவிட்டேன்.

    வரும் 8-ம் தேதி சைதாபேட்டை நீதிமன்றத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கை தொடர உள்ளேன்.

    அதற்கு மேல் அண்ணாமலை மீது 100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன். சிவில் வழக்கு பின்னர் தொடரப்படும்.

    திமுக தலைவரின் பெயரையும், புகழையும் கெடுக்க ஏதோ ஒரு சதி நடக்கிறது.

    அதை நீங்கள் செய்தால் இங்குள்ள ஒவ்வொரு தொண்டனும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நாங்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட சக்தி.

    திமுகவை அசைத்து பார்க்கவோ, தொட்டுப் பார்க்கவோ யாராலும் முடியாது.

    நாங்கள் எமர்ஜென்சி, மிசாவெல்லாம் பார்த்தவர்கள். அண்ணா மலையை பற்றி யாரும் பேச வேண்டாம் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் எல் ஜி அண்ணா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்திமாநில தீர்மானம் செயலாளர் ஒரத்தநாடு தொகுதி பார்வையாளர் அக்ரி கணேசன் தஞ்சை தொகுதி பார்வையாளர் சங்கர் திருவையாறு தொகுதி பார்வையாளர் வீர கணேசன் ஒன்றிய செயலாளர் முரசொலி செல்வகுமார் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மாவட்ட துணை செயலாளர் பாலாஜி கனகவல்லி மணிமாறன் பகுதி செயலாளர்கள்மேத்தா நீலகண்டன் கார்த்திக் சதாசிவம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×