search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்- மின்வாரிய அதிகாரி உத்தரவு
    X

    மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்- மின்வாரிய அதிகாரி உத்தரவு

    • அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது
    • நெல்லை மாவட்டத்தில் இடி- மின்னல் மழை, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறி யாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

    கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் நெல்லை நகர்ப்புற கோட்டம் முத்துக்குட்டி மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசியதாவது:-

    மின்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் வருகிற 31-ந்தேதி கோடை காலம் முடியும் வரை தங்கு தடையின்றி மின் வினியோகம் செய்வதற்கு ஏதுவாக அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது

    நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏற்பட்ட மின்தடங்களை இரவு-பகல் பாராது உடனடியாக சரி செய்த அனைத்து மின் பொறி யாளர்கள், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பு நெறிமுறை களுடனும் பணிபுரிய வேண்டும்.

    கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடும் இடி- மின்னல் மழை பொழிவு சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணி புரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    வருகின்ற காலங்களில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் பாதையில் மின்தடங்கள் ஏற்படுத்தும் மரக்கிளைகளை அப்புறப் படுத்தவும், பீங்கான் வட்டு பதிலாக இயற்கை இடர் பாடுகளின் போது முடிந்த வரை மின் தடங்கள் ஏற்படுத்தாமல் இருக்கும் பாலிமர் வட்டு மற்றும் பாலிமர் முள் சுருள் பொருத்துவதற்கு தேவை யான மதிப்பீடு தயார் செய்து பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும்.

    மேலும் மின் நுகர் வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரி விக்க அறிவுரை வழங்கி னார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப் பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 அனைத்து மின் நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மின்சார சம்பந்தமான அனைத்து தேவைகளையும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 தொடர்பு கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×