search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நன்றி தெரிவித்த மக்கள்
    X

    கோவையில் பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நன்றி தெரிவித்த மக்கள்

    • கடந்த மாதம் அவினாசி- அத்திக்கடவு திட்டம் முழுமை அடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
    • இத்திட்டம் நிறைவேறியதற்கு, அம்மன் சுவாமிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    அவினாசி-அத்திக்கடவு திட்டம் நிறைவேறியதை அடுத்து, போராட்ட குழுவினர் பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து, அம்மனுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.

    அவினாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற காலதாமதம் ஆனதை அடுத்து, விவசாயிகள், பொதுமக்கள் அவிநாசி-அத்திக்கடவு திட்ட போராட்ட குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    அதில் ஒன்றாக அந்தந்த கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள், மேட்டுப்பாளையம் அடுத்த வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து, பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து சென்றனர்.

    அந்தந்த கிராமங்களில் கோவிலில் உள்ள அம்மன் சுவாமி உள்பட பல்வேறு சுவாமிகள் மீது தீர்த்தத்தை ஊற்றி, திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் என 8 ஆண்டுகளாக அபிஷேகம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் அவினாசி- அத்திக்கடவு திட்டம் முழுமை அடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அவிநாசி, அன்னூர் தாலுகாவை சேர்ந்த ராய்கவுண்டன்புதூர், வடுகனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வாகனங்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு வந்தனர்.

    ஆற்றில் தீர்த்தம் எடுத்து குடத்திற்கு மாலையிட்டு பூஜை செய்தனர். பின்பு விநாயகர், வனபத்ரகாளியம்மனை வழிபட்டனர்.

    பின்னர் அவரவர் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள கோவில்களில் உள்ள அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் மீது தீர்த்தத்தை ஊற்றி, திட்டம் நிறைவேறியதற்கு, அம்மன் சுவாமிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.

    Next Story
    ×