search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை ரூ.60 ஆக குறைந்தது
    X

    கோவையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை ரூ.60 ஆக குறைந்தது

    • கடந்த சில நாட்களாக 25 டன், 50 டன் என வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.
    • உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.64 வரை விற்பனை செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை எம்.ஜி.ஆர். மொத்த காய்கனி மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு நேற்று ஓரே நாளில் தக்காளி வரத்து 130 டன்களாக அதிகரித்தது. இதனால், நாட்டுத்தக்காளி விலை கிலோ ரூ.60 ஆக சரிந்தது.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், கோவை க்கு வழக்கமாக வரும் உள்ளூர் தக்காளிகளின் வரத்து குறைவாக இருந்தது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து இருந்தது.

    இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கோவைக்கு உள்ளூர் தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தக்காளியின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை விலை குறைந்து வருகிறது.

    இதுகுறித்து கோவை தியாகி குமரன் மார்க்கெட்டின் அனைத்து மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறும் போது, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு தக்காளி வரத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக 25 டன், 50 டன் என வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.

    நேற்று எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டுக்கு உள்ளூர் பகுதிகளில் இருந்து நாட்டுத்தக்காளி 100 டன்னும், தியாகி குமரன் மார்க்கெட்டுக்கு 30 டன்னும் வந்துள்ளது.

    அதே சமயம் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆப்பிள் தக்காளி வரத்து குறைந்துள்ளது. நாட்டுத் தக்காளி கிலோ ரூ.50, ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி மொத்த விற்பனையில் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

    உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.64 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×