என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் 2064 சிறப்பு முகாம்களில் 32-வது மெகா தடுப்பூசி முகாம்- கலெக்டர் சாந்தி தகவல்
- தருமபுரியில் நாளை தடுப்பூசி முகாம் நடக்கிறது.
- இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் நாளை (24-ந்தேதி) காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை 32வது மெகா தடுப்பூசி முகாம் 2064 சிறப்பு முகாம்களில் நடைபெறும் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையாக கட்டுபடுத்திட கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி தருமபுரி மாவட்டத்திலும் கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் அனை வருக்கும் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்துவதை இலக்காக கொண்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2064 சிறப்பு முகாம்களில்நாளை (24-ந்தேதி) காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை 32-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாமல் வருவோருக்கு அரசு விதிமுறையின்படி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வியியல் நிலையங்களில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்திட வேண்டும்.
எனவே, தருமபுரி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்