search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி
    X

    ஒகேனக்கல்லில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி

    • ஊட்டமலை சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.
    • சுற்றுலா பணிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்த கூட இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் கோடை விடுமுறை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவது வழக்கம்.

    பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்.

    அவ்வாறு குவியும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாமல் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலிருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது மட்டும் அல்லாமல் ஊட்டமலை சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் சுற்றுலா பணிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்த கூட இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி செய்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×