search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில்  ரூ.75 லட்சம் செலவில் சாலையில்   எல்.இ.டி. விளக்குகள்  பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    X

    கன்னியாகுமரியில் ரூ.75 லட்சம் செலவில் சாலையில் எல்.இ.டி. விளக்குகள் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

    • தெருவிளக்குகளை மாற்றி விட்டு ரூ.75 லட்சம் செலவில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது மற்றும் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
    • செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அதிகாரி முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். வார்டு உறுப்பி னர்கள் சுபாஷ், ஆனி ரோஸ்தாமஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்

    கன்னியாகுமரி,

    ஜூன்.30-

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அதிகாரி முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். வார்டு உறுப்பி னர்கள் சுபாஷ், ஆனி ரோஸ்தாமஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமையை மறு ஏலம் விடுவது, சிலுவை நகர் முதல் சன்செட் பாயிண்ட் வரை உள்ள கருவேல மரங்களை அகற்றி அந்தப்பகுதியில் புல்வெளி அமைத்துஅழகுபடுத்தி மேம்படுத்துவது, குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு ரூ.36 லட்சம்செலவில் 13 குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்குவது, ஒற்றையால் விளை அரசு பள்ளியில் ரூ.6 லட்சம்செலவில் மேற்கூரை அமைத்து பராமரிப்பு பணி செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தெருவிளக்குகளை மாற்றி விட்டு ரூ.75 லட்சம் செலவில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது மற்றும் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

    Next Story
    ×