search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டம்பட்டி கிராமத்தில்   மாரியம்மன் கோவில் திருவிழா
    X

    திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

    காட்டம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா

    • ஸ்ரீ காளியம்மன் ஊர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கொண்டாடுவது வழக்கம்.
    • பக்தர்கள் தீமித்து வேன்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஊர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கொண்டாடுவது வழக்கம்.

    அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களான அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக மாவிளக்கு எடுத்தல் , பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பூ கரகம் எடுத்தனர். பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும், என மேளதாளம் முழங்க ஸ்ரீஊர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ காளியம்மன் கோவில் வரை நடந்து சென்று பக்தர்கள் தீமித்து வேன்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் அம்மனுக்கு கோழி, கிடா ஆகியவற்றை பலியிடட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×