என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இலக்கிய திறனறி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த தருமபுரி மாணவ, மாணவிகள்
- பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்பட்டது.
- ரூ.33 லட்சத்து 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 1,550 மாணவர்கள், 3,214 மாணவிகள் என மொத்தம் 4,764 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவர்கள், 77 மாணவிகள் என மொத்தம் 92 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தருமபுரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ.36 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ.33 லட்சத்து 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.