search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்ட‌அள்ளியில்  மண்டு மாரியம்மன் கோவிலில்   ஆடி மாத திருவிழா
    X

    பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி.

    மாரண்ட‌அள்ளியில் மண்டு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா

    • பெண்கள் அனைவரும் பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
    • பக்தர்களுக்கும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்ட‌அள்ளியில் பஸ் நிலைய‌ம் அருகே அமைந்துள்ள மிகப் பழமை வாய்ந்த மண்டு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது.விழாவில் கோவில் பூசாரிகள், சங்கத்தினர் மற்றும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் சனத்குமார் நதியில் சக்தி அழைக்கப்பட்டு கரக ஊர்வலம் கடைவீதி வழியாக வீதி உலா வந்தனர்.

    இதில் பெண்கள் அனைவரும் பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.

    பிறகு பக்தர்களுக்கும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டு மாரியம்மனுக்கு கும்ப பூஜை மற்றும் பலி பூஜைகள் நடைபெற்றது.

    இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

    Next Story
    ×