search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மயிலாடுதுறையில், பிளஸ்-2 தேர்வு மையத்தை கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    பிளஸ்-2 தேர்வு மையத்தை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

    மயிலாடுதுறையில், பிளஸ்-2 தேர்வு மையத்தை கலெக்டர் திடீர் ஆய்வு

    • 38 பொது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • கண்காணிக்க 824 அறை கண்கணிப்பாளர்கள் மற்றும் 90 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வை 5134 மாணவர்களும், 6057 மாணவிகளும் என மொத்தம் 11191 பேரும் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வை 4446 மாணவர்களும், 5565 மாணவிகளும் என 10011 பேரும் எழுதுகின்றனர்.

    மாவட்டத்தில் 36 பொது தேர்வு மையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான மையங்களும் ஆக மொத்தம் 38 பொது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க 824 அறைக்கண் கணிப்பாளர்கள் மற்றும் 90 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்வை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×