search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி நெல்லையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்-120 பேர் கைது
    X

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி நெல்லையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்-120 பேர் கைது

    • தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி, நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பாளை தாலுகா கமிட்டி மற்றும் பாளை கிளை சார்பில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள எல்.ஐ.சி. மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித் தார். தொடர்ந்து கட்சியினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பாளை பஸ் நிலையம் பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாளை பஸ் நிலையம் சிக்னல் பகுதியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் சிறிது நேரம் மாற்று பாதையில் இயக்கப பட்டது.

    தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை பாளை உதவி கமிஷனர் பிரதீப் தலைமையிலான போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர்.

    போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் கோபாலன், மாவட்டத் தலைவர் மதுபால், இடை கமிட்டி செயலாளர்கள் நாராயணன், குழந்தைவேலு, கவுன்சிலர் முத்து சுப்பிர மணியன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் அம்பை, வி.கே புரம், வள்ளியூர், களக்காடு, முக்கூடல், வீரவநல்லூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×