என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் 700 ரேசன் கடைகளை மூடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன.
- ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக இரண்டாவது நாளாக தனித்துறை, 3 சதவீதம் அகவிலைப்படி, புதிய விற்பனை முனையம், 4 ஜி மோடம் வழங்குதல், ஓய்வுதியம், சரியான விலையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்குதல், உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7,8,9 தேதியில் மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் என அறிவிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பாக ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 700 ரேசன் கடைகள் மூடப்பட்டன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.