search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி பேரூராட்சியில்   ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா
    X

    சாலைகள்   அமைக்கும்பணி தொடக்கவிழா.

    செஞ்சி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா

    • ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பதற்கு பூஜைபோடும் நிகழ்ச்சி நடந்தது.
    • மொக்தியார்மஸ்தான் பூமிபூஜை தொடங்கிவைத்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி பேரூராட்சியை சேர்ந்த வ.உ.சி. தெருவில் ரூ.21 லட்சம் மதிப்பிலும், கட்டபொம்மன் தெரு விரிவாக்கத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலும், குறிஞ்சி நகர் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பிலும், வேலன் நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலும், தேசூர் பட்டை விரிவாக்க பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பிலும் மொத்தம் ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பதற்கு பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜய குமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணி களை தொடங்கி வைத்தனர். பேரூராட்சித் துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக், பொன்னம்பலம், சங்கர், சுமித்திரா சங்கர், சீனிவாசன், கோட்டை குமார், ஜான்பாஷா, நெடுஞ்செழியன், தமிழ் ஆசிரியர் தமிழரசன், ஒப்பந்ததாரர் கவுஸ் பாஷா, உதவி பொறியாளர் சுப்பிர மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×