search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளவனூரில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா திறப்பு விழா:அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
    X

    விழுப்புரம் அடுத்த வளவனூரில் புதியதாக திறக்கப்பட்ட பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்ததை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டார். அருகில் கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் உள்ளனர்.

    வளவனூரில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா திறப்பு விழா:அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

    • அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
    • உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்து, 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு ஒப்படைத்தார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் சார்பில், தலா ரூ.2.10 லட்சம் மானியம் வீதம், 38 நபர்களுக்கு ரூ.79.30 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் தனி நபர் கழிவறை அமைக்கும் திட்டத்தின்கீழ், தலா ரூ.9,300 வீதம் 10 நபர்களுக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய செயற்பொறியாளர் குமாரதுரை, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அசோக், செயல் அலுவலர் (பொ) ஷேக் லத்திப், கவுன்சிலர்கள் மகாலட்சுமி செந்தில், சசிகலா கபரியேல், சந்திர பாண்டியன், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்திபன், கீதா செந்தில், உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×