என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போடி அருகே தொடர் மழை: செடியிலேயே அழுகும் பூக்கள்-விவசாயிகள் வேதனை
- மீனாட்சிபுரம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் செவ்வந்தி மற்றும் வீரியரக வெள்ளை நிற ஒட்டுசெவ்வந்தி பூக்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.
- செடியிலேயே அழுகி வருவதால் வேதனையடைந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது அழித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் செவ்வந்தி மற்றும் வீரியரக வெள்ளை நிற ஒட்டுசெவ்வந்தி பூக்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையின்போது ஒட்டுசெவ்வந்தி ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. 2-ம் ரக செவ்வந்தி பூக்கள் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. இந்தநிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் பெரும்பாலான செவ்வந்தி பூக்கள் செடியிலேயே அழுகி வீணானது. மேலும் விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். முதல்ரக செவ்வந்தி ரூ.70 முதல் ரூ.80 வரையும், 2-ம் ரகம் ரூ.40 முதல் ரூ.50 வரை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்த விலை பறிப்புகூலிக்குகூட பத்தவில்லை. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் செடிகளை டிராக்டர் மூலம் உழுது அழித்தனர்.