search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் விற்பனை அதிகரிப்பு
    X

    கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் ஆடுகள் வாங்க திரண்டு இருந்த வியாபாரிகள்

    கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் விற்பனை அதிகரிப்பு

    • எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது.
    • குறிப்பாக இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. வாரம் தோறும் சனிக்கிழமை அன்று அதிகாலை முதலே நடைபெறும் இச்சந்தையில் ஆடுகள், கோழிகள்,சண்டை சேவல், பந்தயப்புறா, பசு மாடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கான காளை மாடுகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது வழக்கம்.

    ஆடிப்பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இச்சந்தையில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் கால்நடை விற்பனையாகி வருகிறது. குறிப்பாக இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. மேச்சேரி, பென்னாகரம்,தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும் அதிகப்படியான கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கால்நடைகளை மொத்தமான கொள்முதல் செய்தனர். ஆடு மற்றும் கோழிகளின் விலை வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×