என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு
- கடந்த சில நாட்களாக முல்லைப்பெரி யாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
- கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டுள்ளதால் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலைய த்தில் 36 மெகாவாட்டிலிருந்து 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. முதல் போக பாசனத்திற்காக கடந்த ஜூன் 1ந் தேதி 300 கன அடி தண்ணீர் திறக்கப்ப ட்டது. அதன்பின் 21ந் தேதி 336 கன அடியாகவும், 24ந் தேதி 400 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது. ஆகஸ்டு 29ந் தேதி வரை 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் மழை குறைந்ததால் 30 ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்ப ட்டது.
கடந்த மாதம் 5ந் தேதி முதல் மீண்டும் 400 கன அடியாக அதிகரிக்க ப்பட்டது. குருவனூத்து பாலம் அருகே முல்லை ப்பெரியாற்றின் குறுக்கே மதுரை குடிநீர் திட்ட தடுப்பணை கட்டும் பணிக்காக கடந்த 9ந் தேதி அணையிலிருந்து தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முல்லைப்பெரி யாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
இதனால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக 500 கனஅடி நீர் திறக்கப்ப்படு கிறது. இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. வரத்து 510 கன அடி. திறப்பு 500 கன அடி. இருப்பு 2520 மி.கன அடி. அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டுள்ளதால் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலைய த்தில் 36 மெகாவாட்டிலிருந்து 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது. வரத்து8 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1634 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 79.04 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.
பெரியாறு 12.8, தேக்கடி 2.8, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.6, மஞ்சளாறு 6, சோத்து ப்பாறை 4, பெரியகுளம் 3.6 மி.மீ மழையளவு பதிவானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்