search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூக்களின் வரத்து அதிகரித்தும்  தொடர் மழையால் வெறிச்சோடிய தருமபுரி பூ மார்க்கெட்
    X

    தொடர்மழையால் வெறிச்சோடி கிடக்கும் தருமபுரி பூ மார்க்கட்டை காணலாம்.

    பூக்களின் வரத்து அதிகரித்தும் தொடர் மழையால் வெறிச்சோடிய தருமபுரி பூ மார்க்கெட்

    • ஒரு வாரமாக மாவட்டத்தில் மழை இன்றி மிதமான சீதோசன நிலை காணப்பட்டது.
    • வியாபாரிகள் வராததால் தருமபுரி பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகபடியாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யும் பூக்கள் தினந்தோறும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பூ மார்க்கெட்டில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் வெளி மாவட்டங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மழை இன்றி மிதமான சீதோசன நிலை காணப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வங்க கடலில் புயல் நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் எனவும் புயலானது இன்று வலுப்பெற்றுள்ளதால் தொடர் மழை பெய்து வரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தருமபுரி மாவட்டத்தில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென மழை பொழிய தொடங்கியது தொடர்ந்து இன்று காலை வரை விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது.

    இதனால் தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து இருந்தும் வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் தருமபுரி பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×