search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை உப்பிலிபாளையத்தில் அதிகரித்த போக்குவரத்து நெரிசல்
    X

    கோவை உப்பிலிபாளையத்தில் அதிகரித்த போக்குவரத்து நெரிசல்

    • 4 சக்கர வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
    • சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில் அவிநாசி சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பீளமேடு, ஹோப் காலேஜ், சித்ரா, ஏர்போர்ட், கருமத்தம்பட்டி, அவிநாசி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் பஸ் செல்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வித மாக அவினாசி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை அவினாசி ரோடு மேம்பாலம் அருகே தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் எதிரே உள்ள சாலையில் ஹார்டுவேர்ஸ் மற்றும் லைட் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக உள்ளது. அந்தக் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் கோவிலின் எதிரே 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் தண்டு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பகுதியில் இருந்து உப்பிலிபாளையம் சிக்னல் வரை வரிசையாக 4 சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதன் காரணமாக அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையில் அணிவகுத்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் மற்றும் நஞ்சப்பா ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த இடத்தில் சங்கமிப்பதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அப்பகுதி அகலமான ரோடு ஆகும்.

    ஆயினும் 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. இந்த அவல நிலை மாற வேண்டுமெனில், போக்கு வரத்து போலீசார் அதனை கண்காணிக்க வேண்டும். சாலை ஓரத்தில் நிறுத்த ப்பட்டிருக்கும் வாகன ங்களை கண்டுபிடித்து அவர்க ளுக்கு அபராதம் விதிக்க வே ண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே அவினாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், தண்டு மாரியம்மன் கோவில் எதிரே வரும்போது மிகுந்த நெரிசலை சந்திக்க வேண்டி உள்ளது. ஏனெனில் ஆங்காங்கே 4 சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இந்த அவல நிலை மாறினால் பயணம் மிகவும் ஏதுவாக இருக்கும் என்றனர்.

    Next Story
    ×