என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அதிகரிக்கும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்
- அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது
- வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது.
அவிநாசி :
அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரத்தில் சாலையில் சுற்றி திரிவதோடு, நடத்து செல்லும் குழந்தைகளை துரத்துதல், மோ ட்டார் சைக்கிள்களில் செல்வோரை கடிக்க துரத்துதல் போன்ற செயல்களில் நாய்கள் ஈடுபடுகின்றன.இது குறித்து காமராஜ் நகரை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது. அருகில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்கே நாய்கள் எங்காவது சுற்றி கொண்டிருக்கின்றதா என்று பார்த்து விட்டு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் ரோட்டில் அங்கும் இங்கும் ஓடுவதால் எந்த சமயத்தில் என்ன நடக்குமே என்ற அச்சமே அதிகரிக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ரோட்டில் வந்து நிற்க முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், நாய்களை பிடித்து அதற்கு கருத்தடை ஊசி போட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றனர்.