என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுகதை போட்டியில் பங்கேற்க விருப்பமா? படைப்புகளை அனுப்பலாம்
- இந்த படைப்புகள் இதுவரையில் எந்த இதழிலும் வெளிவராததாக இருக்க வேண்டும்.
- இந்த போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா பின்னா் அறிவிக்கப்படும்.
திருப்பூர்
திருப்பூா் மக்கள் மாமன்றம் சாா்பில் நடத்தப்படும் சிறுகதைப் போட்டிகளுக்கு வரும் மாா்ச் 31ந்தேதிக்குள் படைப்புகளை அனுப்பிவைக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மக்கள் மாமன்றம் அறக்கட்டளை தலைவா் சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ் எழுத்தாளா்களை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூா் மக்கள் மாமன்றம் சாா்பில் சிறந்த சிறுகதைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் யாா் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். கொங்கு நாட்டு கலை, கலாசாரம், பண்பாடு வட்டார வழக்கு பற்றியே தலைப்பு இருக்க வேண்டும்.
இந்த படைப்புகள் இதுவரையில் எந்த இதழிலும் வெளிவராததாக இருக்க வேண்டும். கதையின் அளவு ஏ4 தாளில் 5 பக்கங்கள் கைெயழுத்து மற்றும் தட்டச்சு 2 பிரதிகளின் நகல்களை அனுப்ப வேண்டும். உடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2, முழு முகவரி, தொலைபேசி எண், சுய விலாசம் அஞ்சல் அட்டை ஒன்றையும் அனுப்ப வேண்டும்.
இந்த போட்டிக்கான படைப்புகளை கொரியா் அல்லது நேரிலோ வரும் மாா்ச் 31-ந் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் படைப்புகள் குறித்த விவரம் வரும் ஏப்ரல் 14ந் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அறிவிக்கப்படும். இதில் முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையே ரூ.2 ஆயிரம், ரூ.1000 வழங்கப்படும் ஆறுதல் பரிசாக 10 நபா்களுக்கு தலா ரூ.500 வழங்கப்படும்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா பின்னா் அறிவிக்கப்படும். நடுவா் குழுவின் முடிவே இறுதியானதாகும். படைப்புக்களை அனுப்ப வேண்டிய முகவரி: திருப்பூா் மக்கள் மாமன்றம், மங்கலம் சாலை, (டைமண்ட் திரையரங்கம் அருகே), திருப்பூா்-641604, செல்போன் எண்:93457-20140. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.