search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உலக மகளிர் தின விழா
    X

    பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் மகளிர் தின விழா பேரணி நடந்தது.

    பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உலக மகளிர் தின விழா

    • பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தமிழ்நாடு-பாண்டிச்சேரி தலித் கிறித்தவர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
    • திரு அவையில் சமத்துவம் உருவாக்குவோம் என முழக்கமிட்டு திரளான மகளிர்கள் கலந்து கொண்ட பேரணி ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தமிழ்நாடு-பாண்டிச்சேரி தலித் கிறித்தவர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.

    தஞ்சை மாவட்ட மகளிர் அணி செயலாளர் அடைக்கலமேரி தலைமையிலும் திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் பிரான்சி னாள்மேரி முன்னிலையில் நடைபெற்றது.

    முன்னதாக பாபநாசம் கடை வீதியில் இருந்து மகளிர் அணி சார்பில் கையில் சமத்துவ சிலுவை ஏந்தி சமுதாயத்தில் சமத்துவம், திரு அவையில் சமத்துவம் உருவாக்குவோம் என முழக்கமிட்டு திரளான மகளிர்கள் கலந்து கொண்ட பேரணி ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தது கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளர் சந்தோஷ் மேரி வரவேற்று பேசினார் விழாவில் பாபநாசம் புனிதசெபஸ்தியார் ஆலயத்தின் பங்கு தந்தை கோஸ் மான் ஆரோக்கியராஜ், காட்டூர் ராமநாதபுரம் பங்குத்தந்தை ஜோசப் கிறிஸ்தவராஜ், புதூர் உத்தமனூர் பங்குத்தந்தை அடைக்கலராஜ், கபிஸ்தலம் பங்கு தந்தை அமுல்ராஜ், பாடலூர் பங்குத்தந்தை மார்சலின், மாற்று மருத்துவ இயக்கத்தின் தலைவர் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினர்.

    விழாவில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாநில பொருளாளர் ஷான் ராணி, பாண்டிச்சேரி கொன்சாக அருள் கன்னியர்கள் சபை டெல்பினா, நடைபயண போராளி வசந்தா, திருநறையூர் மதினா பேகம், பாண்டிச்சேரி மாநில தலைவர் ஆரோக்கியசாமி, பாண்டிச்சேரி மாநில செயலாளர் ஜெயராஜ், ஆகியோர் கலந்து கொண்டு மாற்று மருத்துவம் பற்றியும், பெண்கள் விடுதலை பற்றியும் கருத்துரை வழங்கினர்.

    முன்னதாக அபிநயா, சுவேதா ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கப் பாடல், கவிதை ஆகியவற்றை தமிழக மரபில் தெம்மாங்கு இசையில் பாடினார்கள்.

    விழாவில் பெரம்பலூர், புள்ளம்பாடி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, கும்பகோணம், லால்குடி ஆகிய ஊர்களில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×