என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய பிரபல ரவுடியை பிடிக்க கூட்டாளிகளிடம் விசாரணை: தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
- போதை அதிகமாகி தலைக்கேறியதால் நாராயணசாமி 5 பேரிடம் தகராறில் ஈடுபட்டார்.
- மற்ற 4 பேருடன் சேர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவர் மீது புகார் கொடுப்பவர்களை மிரட்டி வாபஸ் பெறச் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். எப்போது ம்மதுபோதை யில் கத்தியுடன் வலம் வரும் நாராயணசாமி, நேற்று கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு படுத்து உறங்கி கொண்டிருந்த 5 பேரை எழுப்பினார். போதை அதிகமாகி தலைக்கேறியதால் நாராயணசாமி 5 பேரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது நாட்டு வெடிகுண்டை எடுத்து 5 பேர் மீது வீசினார். பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பரணிதரன் (வயது 22) படுகாயமடைந்தார். மற்ற 4 பேருடன் சேர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி நாராய ணசாமி அங்கிருந்து தப்பி யோடிவிட்டார். சிறிது நேரம் கழித்து ரெயில் நிலையத்திற்குள் பீதியில் வந்த பயணிகள் ஒரு சிலர் படுகாயமடைந்த பரணிதரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரெயில் நிலைய த்திற்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அங்கு பரணிதரனிடம் விசாரணை நடத்தினர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரபல ரவுடி நாராயண சாமியுடன் தொடர்பில் இருந்த கூட்டாளிகள் 3 பேரை நேற்று இரவு மடக்கி பிடித்தனர். அவர்களை விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து நாராயணசாமி பதுங்கியுள்ள இடம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடிய பிரபல ரவுடி நாராயணசாமியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். சமீபகாலமாக விழுப்புரம் நகரப் பகுதியில் ரவுடிகளின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்