search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தூத்துக்குடியில்   ஐ.என்.டி.யூ.சி.  ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    தூத்துக்குடியில் ஐ.என்.டி.யூ.சி. ஆலோசனை கூட்டம்

    • கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ஜெகநாதன் சிறப்புரை ஆற்றினார்.
    • தமிழகத்தில் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களில் நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க அரசை கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    மதுரையில் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி நடைபெறும் ஐ.என்.டி.யூ.சி. மாநில மாநாடு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. சார்பாக ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். மாநில ஐ.என்.டி.யூ.சி. மூத்த துணை தலைவர் கதிர்வேல் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ஜெகநாதன் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் மாநில செகரட்டரி ஜெனரல் பன்னீர்செல்வம், மாநில அமைப்பு செயலாளர் பெருமாள்சாமி, தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத் தலைவர் சுடலை, தேசிய துறைமுக தொழிலாளர் சங்க தலைவர் சந்திரசேகர், இந்திய உணவுக் கழக தலைவர் வீரய்யா, அனல் மின் நிலைய தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பனை வாரிய உறுப்பினர் எடிசன், டி.சி. டபிள்யூ. முருகன் மற்றும் நிர்வாகிகள் பாலராஜ், ஸ்டீபன், சுரேஷ்குமார், முருகேசன், பால்ராஜ், ஜெயபாக்கியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மதுரையில் ஆகஸ்ட் 7-ந்தேதி நடைபெறும் ஐ.என்.டி.யூ.சி. மாநில மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக 25 வேன்களில் சென்று ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் கலந்து கொள்வது.

    தமிழகத்தில் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிகளில் நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×