search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்  இரும்பு வியாபாரி  விஷம் குடித்து தற்கொலை-சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார்
    X

    தூத்துக்குடியில் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை-சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார்

    • ஜோசப் இரும்பு கம்பிகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்து வந்தார்.
    • தொழிலில் ஜோசப்புக்கு ரூ. 8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 60). இவர் இரும்பு கம்பிகள் மற்றும் காப்பர் போன்றவற்றை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தும், சில்லரை வியாபாரமும் செய்து வந்தார்.

    இந்நிலையில் மில்லர்புரத்தை சேர்ந்த துரை என்பவருடன் சேர்ந்து இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது காப்பர் லோடு எடுத்து வியாபாரம் செய்தால் நல்ல லாபம் பெறலாம் என கூறியதாகவும், அதன் அடிப்படையில் வியாபாரம் செய்த போது தொழிலில் ஜோசப்புக்கு ரூ. 8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தன்னுடைய தொழில் நஷ்டத்திற்கு துரை தான் காரணம் எனவும், இதனால் அதிக பேரிடம் வட்டிக்கு பணம் வாங்கி விட்டதாகவும் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜோசப் எட்டையாபுரம் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள இரும்பு குடோனில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். ஜோசப் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லாததால் சாவில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறினர். இது குறித்து போலீசார், ஜோசப் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×