என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடத்தூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் பெறவும், கடனை புதுப்பிக்க முடியாமலும் விவசாயிகள் அவதி
- கூட்டுறவு சங்கத்தில் சுமார் 6,400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
- அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடத்தூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சுமார் 6,400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் பயிர் கடன், மற்றும் பயிர் கடன் புதுப்பித்தல், புதிய நகை கடன், நகை கடன் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு வங்கியில் கடன் பெற முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்த வங்கியில் ஏற்கனவே பணியாற்றி வந்த செயலாளர் பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை முறையாக அவர் கணக்குகளை ஒப்படைக்கா மல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகி ன்றது.
இந்த நிலையை போக்க பல முறை அதிகாரிக ளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளதாக தெரிகின்றது. நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து ள்ளனர்.