search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக அளவிலான தடகள போட்டியில் கடத்தூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள்  சாதனை
    X

    தொடர்ந்து 16-வது ஆண்டாக சரக அளவில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று சாதனை படைத்த கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை படத்தில் காணலாம்.

    சரக அளவிலான தடகள போட்டியில் கடத்தூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை

    • சரக அளவிலான தடகள போட்டியில் கடத்தூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • கடத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற தடகள போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டி யில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையா டினார்கள்.

    அதில் விளையாடி 104 வெற்றி புள்ளிகளுடன் பெண்கள் பிரிவில் கடத்தூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியும் ஒட்டு மொத்த சாம்பி யன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.

    கடத்தூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியின் இந்த வெற்றி தொடர்ந்து 16-வது ஆண்டாக இப்பட் டத்தை பெறுகிறார்கள்.

    போட்டியில் வென்ற வர்களுக்கு பரிசு கோப்பை பேரூராட்சி தலைவர் கேஸ்.மணி, முன்னாள் தலைமை ஆசிரியர் மோகன் வழங்கினர். வெற்றி பெற்ற மாணவி களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரி யர்கள் ராஜேந்திரன் தென்றல், சத்தியராஜ், ஆனந்த் ஆகியோரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர். பெற்றோர் கழகத்தினரும். பள்ளி மேலாண்மை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள்.

    Next Story
    ×