என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நூற்றாண்டு விழாவையொட்டி கருணாநிதி ஆற்றிய பணிகளை தொகுக்கும் பணி தீவிரம்
- தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறைகளின் செயலாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார்.
- தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் தொடர்பான விவரங்கள் முழுமையாக தொகுக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறைகளின் செயலாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக அரசு துறைகளில் உள்ள செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அரசு துறை செயலாளர்கள் அனைவரும் துறை வாரியாக கருணாநிதி ஆற்றியுள்ள அரும்பணிகள் பற்றிய தகவல்களை திரட்டி வந்திருந்தனர்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து முழுமையான விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் கருணாநிதி தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்த காலங்களில் அவர் ஆற்றிய அரும்பணிகள் தொடர்பான தகவல்களோடு துறை செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.