search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,448 இடங்களில் தடுப்பூசி முகாம்
    X

    கொரோனா தடுப்பூசி முகாமினை கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் தலைமைதாங்கி தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,448 இடங்களில் தடுப்பூசி முகாம்

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32- வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் தலைமைதாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 32- வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி வளாகத்தில் நகர்புற சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் தலைமைதாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகர மன்ற தலை–வர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகி–யோர் முன்னிலை வைத்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுத–பாணி, மருத்துவர்கள் ஜெகதீஷ், பிரபாவதி, ஜெனிபர் ராகுல் ஆகி–யோர் பங்கேற்றனர். மேலும் அடங்கிய மருத்துவ குழுவினர் பொது–மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவ–மனைகள், மருத்து–வக்கல்லூரி மருத்துவமனை, பொதுமக்கள் அதிகம் கூடும்இடங்களில் நடைபெறுகிறது. மேலும், சிறப்பு ஏற்பா–டாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் 93 மையங்கள் உட்பட2,448-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமுன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Booster Dose) 15.07.2022 முதல் 30.09.2022 வரை 75 நாட்களுக்கு அனைத்து தடுப்பூசி மையங்களிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிசெலுத்திக்கொள்ளுமாறும், இரண்டு தவணை செலுத்தியவர்கள் மூன்றாவ–தாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இப்பணிக்காக 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு 40,500 எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு–ள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×