search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் கடலோர காவல் படை நிலையம் அமைக்க வேண்டும்
    X

    இந்திய கடலோர காவல் படையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் ராகேஷ் பாலை விஜய் வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தபோது எடுத்த படம் 

    கன்னியாகுமரியில் கடலோர காவல் படை நிலையம் அமைக்க வேண்டும்

    • விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • கன்னியாகுமரி கடல் பகுதியில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க காலதாமதம் ஏற்படுகின்றது.

    நாகர்கோவில்:

    இந்திய கடலோர காவல் படையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் ராகேஷ் பாலை விஜய் வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தின் கடற்புறத்தில் 42 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சம் மீன வர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் புயல் மற்றும் சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது பல ஆபத்துக்களை சந்திக்கின்றனர். இதன் மூலம் உயிர் மற்றும் பொருள் இழப்புகள் ஏற்படுகின்றன.

    மேலும் இயற்கை சீற்றங் கள் மற்றும் கடலில் ஏற்படும் விபத்துக்கள் காரணமாக மீனவர்கள் கடலில் மாயமாகி விடுகின்றனர். திருவனந்தபுரம் மற்றும் தூத்துக்குடியில் கடலோர காவல் படை நிலையங்கள் இருப்பினும் கன்னியாகுமரி கடல் பகுதியில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடலோர காவல் படைகள் மற்றும் ஹெலிகாப்டர் வந்து சேர காலதாமதம் ஏற்படுகின்றன.

    மேலும் மாவட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது அண்டை நாடுகளின் கடற்படை மற்றும் போலீ சாரால் அத்துமீறி நுழைந்த தாக கூறி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுகின்றனர். இந்த மீனவர்களுக்கு ஆலோச னைகள் வழங்கவும், அவர் கள் எல்லை தாண்டாமல் இருப்பதை கண்காணிக்கவும் கடலோர காவல் படையின் கண்காணிப்பு மிக அவசியம்.

    கன்னியாகுமரியின் நிலவியல் அமைப்பை கணக்கில் கொண்டும், கன்னி யாகுமரி மாவட்டத்தில் வாழ்கின்ற மீனவர்களின் நலனை கருத்தில் கொண் டும் கன்னியா குமரியில் விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றுடன் கூடிய ஒரு கடலோர காவல் படை நிலையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×