search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கந்தசஷ்டி விழா கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • சூரசம்ஹாரம் விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை கணபதி ஹோமமும், கொடி யேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனையும், மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×