search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டம் முழுவதும் தீபாவளி பாதுகாப்புக்கு 1500 போலீசார்
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டம் முழுவதும் தீபாவளி பாதுகாப்புக்கு 1500 போலீசார்

    • மக்கள் கூடும் இடங்களில் டிரோன்கள் பறக்க விட்டு கண்காணிப்பு
    • பெண்களிடம் சில்மி ஷத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் சாதாரண உடையில் பெண் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் மக்கள் புத்தாடைகள் எடுப்ப தற்கும், பண்டிகைக்கு தேவையான பொருட் களை வாங்குவதற்கும் கடை வீதிகளில் அலை மோதி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி ஆண்டு தோறும், பண்டிகைக்கு முந்தைய 2 ஞாயிற்றுக் கிழமைகளிலும் வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான நாளை வடசேரி, அப்டா மார்க்கெட், மீனாட்சிபுரம், செட்டிகுளம்,கோட்டார் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் சென்று பொரு ட்களை வாங்குவார்கள்.

    இது போன்று அடுத்தடுத்து வரும் 2 ஞாயிற்றுக்கிழமை களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.இதனால் அடுத்து வரும் நாட்களில் அனைத்து வணிக பகுதிகளிலும் திருவிழா கூட்டம் போல மக்கள் கூடி புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகளை வாங்கி செல்வார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் என 4 சப்-டிவிஷன்களிலும் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் காலை, இரவு என 2 சிப்டுகள் அமைத்து பாதுகாப்பு பணி செய்கின்றர்.

    முக்கிய தெருக்களில் நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்படும். இதையொட்டி அங்கு கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்க ளின் உதவியுடன், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழு வீச்சில் மேற்கொள்ள இருக்கி றார்கள். இப்போதே கண் காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    மக்கள் கூட்டங்களில் ஊருடுருவி கண்காணிப்ப தற்கு வசதியாக டிரோன் களை பறக்க விடவும் திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை சுற்றுலா தலங்க ளான மண்டைக்காடு, குளச்சல், கன்னியாகுமரி பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

    குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதான பழைய குற்றவாளிகளின் புகைப் படங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்களாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் குற்றவாளிகள் புகுந்தால் காட்டி கொடுக் கும் வசதி கொண்ட தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த தீபாவளிக்கும் அந்த நடைமுறையை பின்பற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடு படுவோரை பிடிக்க மாறு வேடத்திலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    பெண்களிடம் சில்மி ஷத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் சாதாரண உடை யில் பெண் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழு வதும் தேவையான அனைத்து முன் ஏற்பாடு களையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×