search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோழிப்போர்விளையில் 24.5 மில்லி மீட்டர் மழை பதிவு
    X

    கோழிப்போர்விளையில் 24.5 மில்லி மீட்டர் மழை பதிவு

    • முக்கடல் அணை நீர்மட்டம் உயரவில்லை
    • திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரியில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவும் மாவட்ட முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.

    கோழி போர்விளை பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 24.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, நாகர்கோவில், சுருளோடு, தக்கலை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மலையோரப் பகுதியான பாலமோர், பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.11 அடியாக இருந்தது. அணைக்கு 513 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 37.55 அடியாக உள்ளது. அணைக்கு 166 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 5.2, பெருஞ்சாணி 8.6, சிற்றார்1- 7, சிற்றார்2-8.2, பூதப்பாண்டி 11.4, களியல்-4, கன்னிமார் 1.6, குழித்துறை 9.6, நாகர்கோவில் 1, சுருளோடு 12.6, தக்கலை 7, இரணியல் 4.3, பாலமோர் 10.4, மாம்பழத்துறையாறு 4, திற்பரப்பு 10.4, கோழிப்போர்விளை 24.5, முள்ளங்கினாவிளை 12.8, ஆணைக்கிடங்கு 3.

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தாலும் முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாக நீடித்து வருகிறது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் சரிந்து குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாகவே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரிக்க வில்லை.

    தொடர்ந்து மைனஸ் அடியிலேயே இருந்து வருகிறது. முக்கடல் நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 10.90 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் குறைவாகவே உள்ள நிலையில் நாகர்கோவில் நகர மக்களுக்கு புத்தன்அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×