search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவட்டாரில் 3 பேர் கைது
    X

    கோப்பு படம்

    திருவட்டாரில் 3 பேர் கைது

    • 297 கிலோ குட்கா- ரூ.16,500 பறிமுதல்
    • கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக போலீசார் தொடர் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தொடர் நடவ டிக்கைகள் எடுத்து வரு கிறார்.

    இந்நிலையில் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள் மற்றும் போலீசார் சாமியார்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் வேகமாக வந்துள்ளது.

    அதனை நிறுத்தி அதிலிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கேரள மாநிலம் நியமம் பகுதியை சேர்ந்த அன்வர்தீன் (வயது 34), ஹாஜாஹூசைன் (36) மற்றும் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த ஜோஜோ (35) என்பது தெரியவந்தது.

    மேலும் காரை சோதனை செய்தபோது குட்கா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. குட்காவை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிட மிருந்து 297 கிலோ குட்கா மற்றும் ரூ.16,500 பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்பு அவர்கள் மீது திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்குபதிவு செய்தார். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். குட்கா பதுக்கல் வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×